அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் இலவச நீட் பயிற்சி ஜூன் 15ல் தொடங்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே இலவச நீட் பயிற்சிகள் வழங்கி வருகிறது. ஆனால் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட முடியாமல் போய்விட்டது. இதற்கு மாற்றாக அவர்களுக்கு இணைய வழி மூலமாக இலவச நீட் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த அதன்படி ஜூன் 15ம் தேதி முதல் இணைய வழி வகுப்புகள் தொடங்கும் என தற்போது பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இன்றிலிருந்தே தங்களின் பெயரை பதிவு செய்யலாம் என்று சொல்லி அதற்கான லிங்க் ( http://app.eboxcolleges.com/neetregister )கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம் பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ளது.
இணையவழி வகுப்புகளை நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. அந்த குறிப்பிட்ட இணைய தளம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இணையதளம் ஆகும். இதன் மூலமாக ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேர வகுப்புகள் நடைபெறும் என்றும், நான்கு மணி நேர பயிற்சி தேர்வுகளும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.