மாணவர்களுக்கு தமிழ் ஆர்வத்தை தூண்டும் வகையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சலுகையை ஒன்றை வழங்கியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் தமிழ் ஆர்வலரான தொழிலதிபர் செங்குட்டுவன் வசித்து வருகிறார். இவர் திருக்குறளின் கருத்துக்கலால் ஈர்க்கப்பட்டவர். அதனால் இவர் வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வள்ளுவர் பெட்ரோல் ஏஜென்சி, வள்ளுவர் உணவகம் போன்ற அனைத்தையும் திருவள்ளுவர் பெயரிலேயே தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் மாணவர்களுக்கு தமிழின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டும் வகையில் சில சலுகைகளை கூடிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பானது அவர் சொந்தமாக வைத்த நடத்தும் பெட்ரோல் பங்கில் ஜனவரி 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 31 ஆம் தேதி வரை பத்து திருக்குறள் கூறுபவர்களுக்கு அரை லிட்டர் பெட்ரோலும் 20 திருக்குறள் கூறுபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலும் இலவசமாக வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பெட்ரோலின் விலை ரூபாய் 100 தொட்டு விற்பனையாகும் போது மாணவர்களுக்கு திருக்குறள் மீதுள்ள ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு இருக்கின்றது. மேலும் இது பல தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.