சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் வழங்கப்பட்டு வந்த விலையில்லா உணவு நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியதால் சென்னையில் இயங்கும் அனைத்து அம்மா உணவகங்களில் ஏழை எளிய மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. சென்னையில் மட்டும் 15 மண்டலங்களில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் பலன் பெற்றனர். இந்த நிலையில் ஊரங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவை மாநகராட்சி நிறுத்தியது. விலையில்லா உணவு குறித்த அறிவிப்பு வராததால் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் சென்னையில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் விலையில்லா உணவை உண்டு பயன் பெற்றதாக தகவல் அளித்துள்ளனர்.