மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் ரேஷன் கார்டுகளை எவ்வாறு வாங்கலாம் என்பதை குறித்து இதில் பார்ப்போம்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொது விநியோக மற்றும் மானிய விலையில் உணவுப் பொருள்கள் வழங்கும் ரேஷன் கார்டு திட்டத்தின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்களுக்கு இலவச ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என அறிவித்திருந்தது. இந்தியாவில் 80கோடிக்கும் அதிகமானோர் குடும்பங்களுக்கு இலவச ரேஷன் கார்டு வழங்க மத்திய அரசு 90,000 கோடி ஒதுக்கீடு செய்தது.
மக்கள் அருகில் உள்ள நியாய விலை கடைகளில் உணவு பொருட்களை மானிய விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இதற்கு நீங்கள் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தகுதியாகும். உங்களுக்கு இதுவரை ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்றால் பிஎம் இலவச ரேஷன் கார்டு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு முதலில் உங்கள் மாநில உளவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்வையிட வேண்டும். அதில் ரேஷன் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும், பின்னர் அதை கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்ப வேண்டும். பின்னர் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் உங்களது ரேஷன் கார்டு இலவசமாக வந்து சேரும்.