Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலவசமாக சூப் தரமறுத்த தொழிலாளிக்கு… ஏற்பட்ட விபரீதம்… கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதால் பரபரப்பு..!!

சூப் கடையில் நடைபெற்ற வாக்குவாதத்தில் கொதிக்கும் எண்ணெயை தொழிலாளி மீது ஊற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள தொண்டி பகுதியில் உள்ள நம்புதாளை பகுதியில் சகுபர்சாதிக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எஸ்.பி.பட்டினம் பேருந்து நிலையம் அருகே ஆடு, கோழி சூப் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதன்று எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த அகமதுபசீர் என்பவர் சூப் கடைக்கு சென்று இலவசமாக சூப் கேட்டுள்ளார். இதற்கு சாதிக் தர மறுத்ததால் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வாக்குவாதம் முற்றிப்போன நிலையில் ஆத்திரமடைந்த அகமது பசீர் கடையில் கொதித்து கொண்டிருந்த எண்ணெயை எடுத்து சகுபர்சாதிக் மீது ஊற்றியுள்ளார். இதில் படுகாயமடைந்த தொழிலாளியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற எஸ்.பி.பட்டினம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அகமதுபசீரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |