சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்காக செய்யப்படும் பரிசோதனையை அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது
சுவிட்சர்லாந்தில் கொரோனா பரிசோதனை செய்ய நினைப்பவர்கள் அதற்கான செலவை அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருந்து வந்தது. பிறகு மார்ச் மாதம் 4 ஆம் தேதியிலிருந்து தொற்றுக்கான பரிசோதனை செய்பவர்கள் இன்சூரன்ஸ் மூலமாக கிளைம் செய்து கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இதனால் 90% செலவு மக்களுக்கு மிச்சமானது.
ஆனால் இன்சூரன்ஸ் இல்லாதவர்கள் மொத்த செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை இருந்து வந்தது. ஏற்றுக்கொள்ள வேண்டும். சுவிட்சர்லாந்தில் கட்டாய மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் படி அவர்களுக்கான மருத்துவ செலவில் இருந்து 10 சதவீதத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அதிக அளவு தொகையை செலுத்த வேண்டி இருந்தது.
இதனால் மக்கள் படும் துயரத்தை உணர்ந்த அரசு ஜூன் 25 முதல் கொரோனா தொற்றுக்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்தது பரிசோதனை செய்பவர்களுக்கு எந்த வகையான சோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும் அதற்கான செலவு தொகையை திரும்ப கொடுப்பதாக அரசு அறிவித்தது.