உக்ரைன் தலைநகர் கீவ்விலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இலவசமாக ரயில் சேவை தொடங்கப்பட்டிருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. மேலும், தலைநகர் கீவ்வை ஆக்கிரமிக்க ரஷ்ய படைகள் தீவிரம் காட்டியது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் இருக்கும் இரு முக்கிய நகர்களை கைப்பற்றி விட்டதாக ரஷ்ய அரசு அறிவித்தது.
மேலும், உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகராக இருக்கும் கார்கிவ் நகரில் இரு தரப்பு ராணுவ படைகளும் கடுமையாக மோதி வருகின்றன.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. எனவே, உக்ரைன் நாட்டில் இருக்கும் இந்திய மக்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வதற்கு, அந்நாட்டின் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், உக்ரைனின் மேற்கு பகுதியில் இருக்கும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வதற்கும் கீவ் நகரிலிருந்து இலவசமாக ரயில்கள் இயக்கப்பட்டிருக்கிறது.