Categories
உலக செய்திகள்

இலவச உணவை நாடும் கனேடியர்…. உதவும் கரங்களுக்கு சில தகவல்கள் இதோ….!!!!

கனடாவில் இலவச உணவை நாடுவோரின் எண்ணிக்கையானது  அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்நிலையில், உணவு வங்கிகளை அணுகுவது எப்படி மற்றும் உணவு வங்கிகளுக்கு நன்கொடை செலுத்துவது எப்படி என்பது போன்ற கேள்விகளும் பலரிடம் எழுகின்றது. உங்களுக்கு அருகிலுள்ள உணவு வங்கியை நாட விரும்புபவராக நீங்கள் இருந்தால் கீழ்க்கண்ட இணைப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

https://foodbankscanada.ca/find-a-food-bank.

இதனை அடுத்து தேவையிலிருப்போருக்கு உதவுவதற்காகவே வடிவமைக்கப்பட்டவைதான் உணவு வங்கிகள். எனவே இலவச உணவுப் பொருட்களை வழங்குகின்றன.

ஆனாலும், யார் இந்த உணவு வங்கிகளிலிருந்து உதவி பெறலாம் என்பது ஒவ்வொரு உணவு வங்கியைப் பொருத்தும் மாறுபடும்.இந்த உணவு வங்கியில், அலுவலர் ஒருவர் உங்களிடம் உங்கள் பெயர், முகவரி மற்றும் உங்கள் வருவாய் குறித்த சில கேள்விகளைக் கேட்பார். ஆகவே, அரசு அடையாள அட்டை, முகவரிச் சான்று போன்ற சில விடயங்களை உங்கலுடன் கொண்டு செல்வது நல்லது.

பொதுவாக உணவு வங்கியில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழவகைகள், பால் பொருட்கள் ஆகியவை கிடைக்கும். என்றாலும் கூட நீங்கள் உணவு வங்கிக்குச் செல்லும்போது இவை எல்லாமே அங்கு இருக்கும் என கூறமுடியாது. சில உணவு வங்கிகள் குறிப்பிட்ட நாட்களுக்குத் தேவையான உணவு வகைகளை பொட்டலமாக கொடுப்பதுண்டு. மேலும் இடங்களில் பல்பொருள் அங்காடிகளிலிருப்பது போல, நீங்களே சென்று உங்கள் வீட்டிலுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் உங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக, ஏழு நாட்கள் வரை கெட்டுப்போகாத உணவுகள் கிடைக்கும். இதனைத் தொடர்ந்து உணவு வங்கிகளுக்கு பணமாகவும் நன்கொடை கொடுக்கலாம், உணவுப்பொருட்களையும் நன்கொடையாக செலுத்தலாம். பணம் செலுத்துவர்கள் ஆன்லைன் மூலமாகவே செலுத்தமுடியும். மேலும் உணவுப்பொருட்களை நன்கொடையாக வழங்குவோர் நேரில் சென்று தான் வழங்கவேண்டும்.

Categories

Tech |