வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் முற்றிலும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்று உயிரியல் பூங்கா நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது .
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உயிரினங்களை காண வருகின்றனர். இதன் படி கோடை காலங்களில் அதிகப்படியான பார்வையாளர்களை கவரும் விதமாக ஒரு சில புதிய உயிரினங்களையும் வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிமுகம் செய்தது.
இதனை அடுத்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய சலுகை திட்டம் ஒன்றை வண்டலூர் உயிரியல் பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான அறிக்கையானது மே 7ஆம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையின் படி இனி மாற்றுத்திறனாளிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குள் முற்றிலும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்றும், அவர்கள் வரும்பொழுது அவர்களுக்கான அடையாள அட்டையை கட்டாயமாக கொண்டுவர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.