சென்னை: காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 10 மாவட்ட மாணவ – மாணவியருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விலையில்லா மிதிவண்டிகளை திங்கட்கிழமை வழங்குகிறார்.
பள்ளிகளுக்கு நீண்டதூரம் செல்லும் மாணவ – மாணவியரின் சிரமத்தைத் தவிர்க்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுவருகிறது.
டிசம்பர் 23ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்க இருக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்தபிறகு மற்ற மாவட்டங்களில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளாது.