Categories
அரசியல் மாநில செய்திகள்

சுதந்திரம் கிடைக்கவில்லை..! 100லட்டு கொடுங்க… உக்கார்ந்துகிட்டு சொல்ல நீங்க யாரு ? சீமான் பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சமூக நீதி பேசுகிறீர்கள், ஜனநாயகம் பேசுகிறீர்கள்,  தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் ஊராட்சி மன்ற தலைவராக வந்த பிள்ளைகள் உட்கார நாற்காலி இல்லை. பஞ்சாயத்து போர்டில் தலைவர் பெயர் எழுத விடமாட்டேங்கிறீர்கள். உட்கார இடம் இல்லை. உரிமை இல்லை என்றால் அடித்தட்டு மக்களுக்கு சுதந்திரம் வந்தடையவில்லை என்பது தானே அர்த்தம்.

இது எந்த மாதிரியான சமூக நீதி. அதனால் இங்கே தேவர், கவுண்டர், நாடார், கோனார், முத்தரையர், படையாட்சி, பறையர், எல்லாவற்றையும் எண்ணுங்கள். எண்ணி கணக்கை வெளியிடுங்கள். 100 லட்டு இருக்கிறது… நூறு பேருக்கு சாப்பாடு இருக்கிறது…  நீங்கள் இத்தனை பேருக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என எண்ணி சொல்லுங்கள். யாராவது மறுத்தால் கேளுங்கள் ?

அதை விட்டுவிட்டு எண்ணாமல் உனக்கு மூன்று விழுக்காடு கொடுத்திருக்கிறேன்,  நான்கு விழுக்காடு கொடுக்கிறேன் என்று. நீங்கள் யார் எங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு ? இடம் எங்களுடையதா ? அல்லது உங்களுடையதா ?  இதுவரைக்கும் எனக்கு இட ஒதுக்கீடு கொடுத்தவர்கள் பற்றி பேசுகின்ற இந்த திராவிட தலைவர்களிடம் கேட்கிறேன்..

நீங்கள் யார் எனக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு ? இந்த நிலத்திற்கும், இந்த இடத்திற்கும் உங்களுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ? வந்து உட்கார்ந்து கொண்டு சும்மா உங்களுக்கு 3 கொடுத்தேன், 4 கொடுத்தேன் என்று. இடம் எங்களுடையது, உரிமையும் எங்களுடையது. எங்களுக்கு போக மிச்சம் தான் மற்றவர்களுக்கு, நீங்கள் எண்ணாமல் இட ஒதுக்கீடு என்று சொல்கிறீர்கள். கணக்கீடு எடுப்பதற்கு என்ன பயம்? என தெரிவித்தார்.

Categories

Tech |