நாடு முழுவதும் வறுமையில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்க MI நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளுடன் ஆகஸ்டு 31 வரை நீட்டித்து அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டு உள்ளன. இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்லூரி வளாகங்கள் அனைத்தும் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால்,
மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் வறுமையில் வாடும் மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இருக்க சாத்தியமில்லை. இந்நிலையில் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களுக்கும் வகுப்பு எடுப்பது தொடர்பான நடவடிக்கைகளை ஒருபுறம் அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு இருக்கையில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் வகையில் சியோமி நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வறுமையில் சிக்கி தவிக்கும் மாணவர்களுக்கு MI for இந்தியா என்ற திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடி மதிப்பிலான 2500 ஸ்மார்ட்போன்களை இலவசமாக வழங்க உள்ளது. இது அவர்களின் ஆன்லைன் கல்விக்காக பெரிதும் உதவும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.