Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இனி சுலபமா கொண்டு போகலாம்…. தொடங்கப்பட்ட சேவை… மும்முரமாக நடக்கும் பணிகள்…!!

திருப்பூரை அடுத்த வஞ்சி பாளையத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி வரை செயல்படும் சரக்கு ரயில் சேவையானது தொடங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வஞ்சிபளையத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி வரை சரக்கு ரயில் சேவையானது தொடங்கப்பட்டுள்ளது. இதனை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீநிவாஸ் இரவு 9:15 மணிக்கு வஞ்சி பாளையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அப்போது சேலம் கோட்ட மூத்த வணிகப் பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அவருடன் இருந்தனர். இந்த சரக்கு ரயிலானது கவுகாத்தியை வருகின்ற செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு சென்றடையும் என்று தெரிவித்துள்ளனர். இந்த சரக்கு ரயில் ஈரோடு, விஜயவாடா சந்திப்பு, ஜல்பைகுறி சந்திப்பு போன்ற ரயில் நிலையங்களில் இருந்து சரக்குகளை ஏற்றியும் இறக்கியும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கவுகாத்தியில் இருந்து இரவு 8:30 மணிக்கு புறப்படும் இந்த சரக்கு ரயில் வஞ்சிபாளையத்திற்கு  ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணிக்கு வந்தடையும் என்று கூறியுள்ளனர். மேலும் 15 பெட்டிகளுடன் 353 டன் சரக்குகளை கொண்டு செல்லும் இந்த சரக்கு ரயிலானது வாரந்தோறும் இயக்கப்பட உள்ளது. இந்த சரக்கு ரயிலில் மூட்டைகள், ஜவுளி பொருட்கள் போன்ற சரக்குகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு ரயிலில் சரக்குகளை  ஏற்றுவதற்காக முன்பதிவு செய்து அனுப்பும் வேலையில் தனியார் நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று ரயில்வே அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |