அமெரிக்காவின் யூனியன் பசிபிக் ரயில் நிறுவனமானது, சரக்கு ரயில்களில் பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவில் சரக்கு ரயில்களில் திருடப்பட்டிருப்பதாக யூனியன் பசிபிக் என்ற ரயில் நிறுவனம் கூறியிருக்கிறது. சரக்கு ரயில்களில் இருக்கும் கண்டெய்னர்களின் பூட்டை உடைத்து அதில் இருக்கும் பொருட்களை திருடிவிட்டு, வெறும் பெட்டிகளை திருடர்கள் தூக்கி வீசுகிறார்கள்.
அவ்வாறு தூக்கி வீசப்பட்ட காலி பெட்டிகளை சிலர் புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் மட்டும் வருடத்திற்கு சுமார் 160% திருட்டு அதிகரித்திருக்கிறது என்று அந்நகரின் மாவட்ட அரசு வழக்கறிஞரிடம் யூனியன் பசிபிக் ரயில் நிறுவனம் புகார் தெரிவித்திருக்கிறது.
மேலும் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட திருடர்களை கைது செய்து 24 மணி நேரத்தில் விடுவித்ததாக யூனியன் பசிபிக் ரயில் நிறுவனம் கூறியிருக்கிறது.