Categories
உலக செய்திகள்

பிரான்ஸில் வேகமெடுக்கும் கொரோனா… மீண்டும் ஊரடங்கு அமல்…வெளியான அதிரடி அறிவிப்பு …!!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமகா பரவிய காரணத்தினால் அந்நாட்டு அதிபர் மக்களின் நலனைக் கருதி மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பிரான்சில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் பேருக்கு தொற்று பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் கொரோனா வைரஸ்யின் 3 -வது அலை  பரவியுள்ளதாக கூறுகின்றனர்.

ஆகையால் மக்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக அதிபர் இமானுவேல் கேக்ரான் மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து விளக்கமளித்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவித்துள்ளளார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் படி மக்கள் பகல் நேரங்களில் 10 கிலோமீட்டர் தூரம் வரை  மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவதாகும் அதற்கு மேல் செல்ல வேண்டுமென்றால் அனுமதி பெற வேண்டும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் ஊரடங்கை  சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என்றும் இதுவே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு நல்ல தீர்வாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு 3 வாரங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தற்போது கட்டுப்பாடுகளை நாம் தவிர்த்துவிட்டோமனால் கொரோனா பாதிப்பால்  பெருமளவில் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார் .

ஆகையால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை முறையாக செலுத்தி கொள்ள  வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த ஊரடங்கு நிலை தொடராது மே மாத நடுப்பகுதியில் சகஜ நிலைக்கு பிரான்ஸ் நாடு திரும்பும் என்றும் அதிபர்  இமானுவேல் கேக்ரான்  கூறியுள்ளார்.
.

Categories

Tech |