பிரெஞ்சு நிறுவனம் ஒன்று தங்களுக்கு நெருக்கமானவர்கள் உயிரிழந்த பின் அவர்களின் அஸ்தியை ட்ரோன் மூலமாக நவீன முறையில் தாங்கள் விரும்பும் இடங்களில் தூவும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பலர் தங்களுக்கு நெருக்கமானவர்கள் உயிரிழந்த பின் அவர்களின் அஸ்தியை புனிதத்தலங்கள் அல்லது தாங்கள் விரும்பும் இடங்களில் தூவ நினைப்பார்கள். மேலும், சிலர் தாங்கள் உயிரிழந்த பிறகு தங்களின் அஸ்தியை தாங்கள் விரும்பும் இடங்களில் தூவ வேண்டும் என்று விரும்புவார்கள்.
அதன்படி, பிரெஞ்சு நிறுவனமான Terra Ciela. புதிதாக நவீன முயற்சியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன்படி, தங்களுக்கு நெருக்கமானவர்களோ அல்லது செல்ல பிராணிகளோ உயிரிழந்தால் அவர்களின் அஸ்தியை தாங்கள் விரும்பும் இடத்தில் தூவ ட்ரோன்களை பயன்படுத்துகிறது.
மேலும் அஸ்தி தூவப்படுவதை வீடியோவாக எடுத்து சம்பந்தப்பட்ட உறவினர்களை ஒன்றிணைத்து, நிகழ்ச்சி நடத்தி, அந்த காட்சிகளை அவர்களுக்கு காண்பிக்க ஏற்பாடு செய்கிறது. இது மட்டுமல்லாமல், ஜிபிஎஸ் மூலமாக அஸ்தி தூவப்படும் இடங்களை கண்டறிந்து, அதன் பின் உயிரிழந்த நபரின் உறவினர்கள் அங்கு சென்று பார்வையிட வசதி செய்யப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் நீர் நிலைகள், சாலைகள் தவிர மற்ற இயற்கை சூழலில், அஸ்தியை தூவுவதற்கு அனுமதியிருக்கிறது.