பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் அந்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஊரடங்கு கட்டுபாடுகள் விதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் பீட்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே பிரான்சிலிருந்து வருபவர்களுக்கு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிரான்சில் கொரோனோ தடுப்பு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் இந்த வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் எச்சரித்துள்ளார். மேலும் பிரான்சில் சமூக இடைவெளியானது கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும், கொரோனா கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.