பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ,டென்மார்கை சேர்ந்த ஜூலி ஜேக்கப்சென் உடன் மோதினார் .
இதில் 21-15, 21.18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் .இதையடுத்து 2-வது சுற்று ஆட்டத்தில் டென்மார்க் நாட்டின் லைன் கிறிஸ்டோபர்சென்னுடன் பி.வி.சிந்து மோத உள்ளார்.