பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துஅரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடந்த கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தை சேர்ந்த பூசனனை எதிர்த்து மோதினார் .
இதில் 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.மேலும் இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் பி.வி.சிந்து மட்டுமே களத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.