Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : பார்போரா கிரெஜ்சிகோவா சாம்பியன் பட்டம் வென்றார்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பார்போரா கிரெஜிகோவா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . 

பாரிசில்  நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான  இறுதி போட்டி  நடந்தது .இதில்  செக் குடியரசை சேர்ந்த பார்போரா கிரெஜிகோவா, ரஷ்ய வீராங்கனை அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவுடன் மோதினார். இதில் போட்டியின்  ஆரம்பம் முதலே பார்போரா ஆதிக்கம் செலுத்தி வந்தார். இறுதியாக 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் அனஸ்தேசியாவை வீழ்த்தி  பார்போரா  சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இதன் மூலம் பார்போரா முதல்முறையாக   ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அத்துடன் 40 ஆண்டுகளுக்குப் பிறகு  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள முதல் செக் குடியரசு வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.  ஒரு உலக தரவரிசையில் 33 வது இடத்தில் இருக்கும் 25 வயதான பார்போரா கிரெஜிகோவா, இதுவரை 2 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார் என்பது   குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |