பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் 2 வது சுற்றுக்கு முன்னேறினார்.
பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் , இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் , அமெரிக்க வீரரான டெனிஸ் சாண்ட்கிரென் உடன் மோதினார். இதில் 6-2, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று ,2 வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த 2 வது சுற்றில், பாப்லோ குவாசுடன் ஜோகோவிச் மோத உள்ளார்.