Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச், ரபேல் நடால் கால்இறுதிக்கு முன்னேற்றம்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ரபேல் நடால்  காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடந்து வருகிறது .இதில்  ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் , இத்தாலி வீரரான  மசெட்டியுடன் மோதினார். இதில் முதல் 2  செட்டை மசெட்டி  கைப்பற்றினார். அதன் பிறகு  சுதாரித்துக்கொண்ட ஜோகோவிச் 3 மற்றும் 4  வது செட்டை 6-1 , 6-0  கைப்பற்றினார்.

5வது செட்டில் ஜோகோவிச் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். ஆனால் அப்போது மசெட்டிக்கு  காயம் ஏற்பட்டதால், அவர் போட்டியிலிருந்து விலகினார். இறுதியாக ஜோகோவிச் 6-7, 6-7, 6-1,6-0, 4-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதற்கு முன் நடைபெற்ற மற்றொரு போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் , இத்தாலிய வீரரான ஜானி சினரை  7-5, 6-3, 6-0 செட் கணக்கில் வீழ்த்தி ,  காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Categories

Tech |