Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : டொமினிக் திம் அதிர்ச்சி தோல்வி…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நேற்று தொடங்கியது.  

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடைபெறும் இந்த போட்டியில், நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 4 வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீரரான டொமினிக் திம்,  ஸ்பெயின்  வீரரான பாப்லோ அந்துஜாருடன்  உடன் மோதினார். முதல் 2 செட்டை கைப்பற்றிய டொமினிக்,  அடுத்து 3 செட்டை பறிகொடுத்து தோல்வி அடைந்தார். 4 மணி 28 நிமிடங்கள் வரை நடந்த இந்தப் போட்டியில் டொமினிக் திம்மை,  4-6, 5-7, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து , பாப்லோ அந்துஜார் வெற்றி பெற்று 2 வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் .

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில், 2 வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாக , ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியா டிக்கை தோற்கடித்து 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2 வது சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல்            4 வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, குரோஷிய வீராங்கனை அனா கொஞ்ஜூவை,  6-4, 6-3  என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார்.

Categories

Tech |