பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார் .
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், 6 வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.இதில் முதல் 2 செட்டில் சிட்சிபாஸ்6-3, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார் . இதைதொடர்ந்து அடுத்த 2 செட்டை ஸ்வெரேவ் 6-4, 6-4 என்ற என்ற கணக்கில் கைப்பற்றினார் .
இந்நிலையில் வெற்றியை நிர்ணயிக்கும் 5 வது செட்டில் சிட்சிபாஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-3 என்ற செட் கணக்கில் 5 வது செட்டை கைப்பற்றினார். இறுதியாக 6-3, 6-3, 4-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு சிட்சிபாஸ் முன்னேறியுள்ளார். இந்த போட்டி 3 மணி நேரம் 37 நிமிடங்கள் நீடித்தது. 22 வயதான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.