Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா விலகினார்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து முன்னாள்  நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா விலகினார்.

பிரெஞ்ச் ஓபன்  டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா ,ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியா டிக்கை தோற்கடித்து, 6-4, 7-6 (7-4)  என்ற செட் கணக்கில் 2 வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்தப் போட்டி முடிந்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் நவோமி ஒசாகா கலந்து கொள்ளாததால், விதிமுறையை மதிக்காமல் மீறியதாக இவருக்கு ரூபாய் 11 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதே நிலையை அவர் தொடர்ந்ததால் ,போட்டியிலிருந்து நீக்கப்படலாம் என்று பிரெஞ்ச் ஓபன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வோமி ஒசாகா தனது  ட்விட்டர் பக்கத்தில் , ‘ போட்டியில் விளையாடி வரும் மற்ற வீரர்களுக்கு நான் கவனச்சிதறலாக ,  இருக்கக்கூடாது என்பதற்காக , போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன் ‘என்று அவர் பதிவிட்டுள்ளார் .இதனால் அவர் போட்டியிலிருந்து விலகினார்.

Categories

Tech |