இந்த ஆண்டிற்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரனான ரோஜர் பெடரர் விளையாட உள்ளார்.
20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரும் ,முன்னாள் நம்பர் ஒன் வீரருமானவர் ரோஜர் பெடரர். இவர் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் . 39 வயதான ரோஜர் பெடரர் , இதற்கு முன்னதாக நடந்த போட்டிகளில் ,சிறப்பாக விளையாடி நம்பர் ஒன் வீரர் என்று சாதனை படைத்துள்ளார். இந்த வருடத்திற்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், ரோஜர் பெடரர் பங்கேற்க உள்ளதை உறுதி செய்தார்.
இதற்கு முன் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டியில், கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் , அவர் பங்கு பெறவில்லை. தற்போது இந்த ஆண்டிற்கான போட்டியில் அவர் பங்கு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியானது , அடுத்த மாதம் 30ம் தேதி பாரிஸ் நகரில் தொடங்கியிருக்கிறது.