Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: போட்டியில் இருந்து …விலகினார் சிமோனா ஹாலெப்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, ருமேனியாவை  சேர்ந்த சிமோனா ஹாலெப் விலகினார்.

‘கிராண்ட்ஸ்லாம்’அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடக்கும்  , இந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி  வருகின்ற 30 ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 13-ஆம் தேதி வரை பாரீஸில் நடைபெறுகிறது. இந்நிலையில் ருமேனியாவை சேர்ந்த 3வது இடத்தில் உள்ள ,சிமோனா ஹாலெப் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். கடந்த வாரம்  நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் விளையாடிய சிமோனாவிற்கு, இடது பின்னங்காலில் காயம் ஏற்பட்டதால், 2 வது சுற்றில் பாதி ஆட்டத்திலேயே ஒதுங்கினார்.

இதனால் பரிசோதனை செய்ததில், இவருக்கு பின்னங்கால் தசையில் கிழிவு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. பிரெஞ்ச் ஓபன் போட்டி தொடங்குவதற்கு குறுகிய காலமே இருப்பதால், இந்த காயத்திலிருந்து முழுமையாக குணமடைய முடியாது. இதன்காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, விலகுவதாக அவர் கூறினார். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற, பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில்  பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |