பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் எலினா ரிபாகினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 4 ,வது சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினாவுடன் மோதினார் .
இதில் முதல் இரண்டு செட்டையும் ரிபாகினா கைப்பற்றினார். 2 வது செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி ரிபாகினா அசத்தினார். இறுதிக்கட்டத்தில் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வில்லியம்சை வீழ்த்தி , ரிபாகினா வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.