பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று போட்டியில், இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கான, தகுதி சுற்று போட்டி பாரிஸில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், 2 வது சுற்றுப்போட்டியில் இந்திய வீரரான சுமித் நாகல் , அலெஜான்ட்ரோ தபிலோவுடன் மோதினார். இதில் 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் சுமித் நாகல் தோல்வியை சந்தித்தார்.
இதற்கு முன்பாக நடந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த ராம்குமார் ,அங்கிதா ரெய்னா, பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், ஒற்றையர் பிரிவுக்காண போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. இதன்பிறகு வருகின்ற 30-ஆம் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் பிரதான சுற்று போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் , திவிஜ் சரண், அங்கிதா ரெய்னா ,ரோகன் போபண்ணா ஆகியோர் விளையாட உள்ளனர்.