Categories
உலக செய்திகள்

மக்களே அசால்டா இருக்காதீங்க…! 2022-ல் ஆபத்து காத்திருக்கு…. பிரான்ஸ் பிரதமர் எச்சரிக்கை….!!!!

பிரான்ஸ் பிரதமர் காஸ்டெக்ஸ் ஒமிக்ரான் வைரஸ் வருகின்ற 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தீவிரமாக பரவக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்க நாட்டில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது மற்ற உலக நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவதாக பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறியுள்ளார். மேலும் வருகின்ற 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒமிக்ரான் வைரஸ் தீவிரமாக பரவும் என்றும் எச்சரித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தடுப்பூசிகள் ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக முக்கிய பங்காற்றுகிறது. எனவே மக்கள் அனைவரும் நோய் தொற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டுமானால் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் ஒமிக்ரான் வைரசின் வீரியம் குறைவாக இருந்தாலும் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதாக காஸ்டெக்ஸ் கூறியுள்ளார். இதற்கிடையே மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் காலமானது ஐந்து மாதங்களிலிருந்து நான்கு மாதங்களாக குறைக்கப்படுவதாக காஸ்டெக்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |