பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அந்நாட்டில் நடைபெற்ற நட்புமுறை கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அந்நாட்டில் தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட நட்புமுறை கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார். அதாவது பிரான்சில் உள்ள பாய்ஸி நகரில் நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டும் வகையில் பிரான்ஸ் மற்றும் பாரீஸ் மருத்துவமனை அறக்கட்டளை சார்பில் கால்பந்து போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்று பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அதிபர் இமானுவேல் மேக்ரான் கோல் அடித்துள்ளார். அதன் பின்னர் 1-க்கு 1 என்ற கோல் கணக்கில் இறுதி ஆட்டம் சம நிலையில் முடிந்துள்ளது.