பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விஸ்வரூபம் எடுத்து வரும் பெகாசஸ் விவகாரத்தால் தனது மொபைல் போன், எண்ணை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அரசியல் அரங்கில் இன்று வரை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் பெகாசஸால் மொராக்கோ, மெக்சிகோ, ஈராக், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய பிரமுகர்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதன் காரணமாக உலக அளவில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டிருந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உளவு பார்க்கப்பட்ட பட்டியலில் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து அவர் தனது மொபைல் நம்பரையும், மொபைல் போனையும் மாற்றிவிட்டார் கூறப்படுகிறது.
இதற்கிடையே பிரான்ஸ் அதிபரின் அலுவலக அதிகாரி ஒருவர் பல மொபைல் எண்கள் அதிபருக்கு ஏற்கனவே இருப்பதாகவும், புதிதாக மாற்றப்பட்டுள்ள மொபைல் எண் மற்றும் போன் கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என்று கூறியுள்ளார்.