Categories
உலக செய்திகள்

ராணுவ வீரர் பலி…. ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த ஜெனரல்…. அறிக்கை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம்….!!

பிரெஞ்சு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரெஞ்சு ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” Adrien Quelin என்பவர் மாலியில் உள்ள Timbuktu-வில் இருக்கும் ரிலே பாலைவனம் முகாமில் ராணுவ வீரராகவும் வாகனங்களை பழுது பார்ப்பவராகவும் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் அக்டோபர் 12 ஆம் தேதி ஒரு டிரக்கில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக டிரக்கின் ஒரு பாகம் அவர் மீது விழுந்துள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் Adrien உயிரிழந்துவிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Le général Thierry Burkhard, nouveau chef d'état-major de l'armée de terre  | Secret Défense | L'Opinion

மேலும் பிரெஞ்சு பாதுகாப்புத் தலைமை ஜெனரலான Thierry Burkhard மறைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 லிருந்து சாஹலில் உள்ள புர்கினா பாசோ, சாட், மாலி, மௌரிடேனியா மற்றும் நைஜர் போன்ற பகுதிகளில் பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக பிரெஞ்சு ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Categories

Tech |