Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி ஏற்படும் மின்தடையால்… பொதுமக்கள் பெரும் அவதி… சீரான மின்சாரம் வழங்க கோரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த போகலூர் கிராமத்தில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து கொசு தொல்லையும் அதிக அளவில் இருப்பதால் மின்தடை ஏற்பட்ட சமயத்தில் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதனைத்தொடர்ந்து போகலூர் பகுதியில் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |