கணவன்-மனைவி போல் நடித்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கம் பகுதி ராயலா நகர் மூன்றாவது மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர்கள் அடிக்கடி சென்று வந்துள்ளனர். இதனால் சில சந்தேகம் அடைந்தனர். உடனே அவர்கள் ராயலா நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்படி வீட்டிற்கு விரைந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் ஒரு இளம் பெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது.
விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அந்த பெண்ணை போலீசார் மீட்டு ஒரு காப்பகத்தில் சேர்த்தனர். இதுதொடர்பாக அந்த வீட்டில் இருந்த ஆனந்த் மற்றும் பிலால் என்பவரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு பேரும் கணவன், மனைவி போல் நடித்து வீட்டை வாடகைக்கு எடுத்து இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.
மேலும் இந்த வீட்டிற்கு பெண்களை அழைத்துவந்து தங்கவைத்து ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்து வந்துள்ளனர். இந்த ஆன்லைன் விபச்சாரத்திற்காக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது. தலைமறைவான தரகர்களை போலீசார் தேடி வருகின்றனர்.