ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் ஆன்லைன் மூலம் மற்றும் நேரடியாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பரமக்குடி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் விஜய பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது பரமக்குடி குத்துத்தெரு பகுதியை சேர்ந்த துளசிராமன்(60), தங்கவேலு(52), தினகரன்(24), ராஜ்குமார்(33) ஆகிய 4 பேர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த 4 பேரை கைது செய்த போலீசார் லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.