ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணமான இளம்பெண் தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்துள்ள பொட்டிதட்டி பகுதியில் அனுசியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 ஆண்டுகள் முன்பு திருமணமாகி தற்போது 2 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சில நாட்களாகவே குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு அனுசியா மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று அனுசியா அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அனுசியாவை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்றதால் ராமநாதபுரம் மாவட்ட உரிமையியல் நீதிபதி முல்லை மருத்துவமனைக்கு நேரில் வந்து அனுசியாவிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.