விருதுநகர் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் அம்மன் நகரை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகளான ராஜலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த பாக்யராஜ் என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியருக்கு தற்போது 2 1/2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து சம்பவத்தன்று இருவருக்கிடையில் வாக்குவாதம் முற்றிப்போன நிலையில் ஆத்திரம் அடைந்த ராஜலட்சுமி வீட்டின் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து ராஜலட்சுமியின் தாயார் மகேஸ்வரி சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.