சமூக ஊடகங்களில் அடிக்கடி ஏதாவது சவால்கள் வைரலாகி வருகின்றது. அந்த வகையில், சால்ட் சேலஞ்ச் (Salt Challenge) சவால் இப்போது டிக் டாக்கில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் டிக் டாக் செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்கள் ஒவொருவரும் தங்களின் வீடியோ அதிக லைக்குகளை பெற வேண்டும் எனவும், அதிகபேர் பின் தொடர வேண்டும் எனவும் வித்தியாம் வித்தியாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்திலும் டிக் டாக் பயன்படுத்தாத நபரே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், ஒருசிலரை தவிர நிறைய பேர் டிக் டாக்கில் மூழ்கி கிடக்கின்றனர்.
அதேநேரம் ஒருசிலர் சர்ச்சையாகவும், பெண்களை ஆபாசமாக சித்தரித்தும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒருசிலர் லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக கவர்ச்சியாக டிக் டாக் செய்து வருகின்றனர். இதற்கு தடை செய்யவேண்டும் என ஒருபக்கம் கோரிக்கை எழுந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் டிக் டாக் செயலியை தடை செய்வது அவ்வளவு எளிதல்ல என்று தான் தெரிகிறது. இந்த டிக் டாக்கில் சமீபத்தில் கிகி சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என ஒவொன்றாக வைரலாகி வைரலானது.
ஆனால் ஒரு சில டிக் டாக் சவால்கள் நம் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடிய வகையில் இருக்கின்றன. ஆம், சமீபத்தில் பரவி வைரலான #skullbreaker சவால் தான் இதற்கு உதாரணம். skullbreaker சவால் என்றால் மூன்று பேர் வரிசையாக நின்று கொண்டு உயரமாக குதிப்பார்கள். இதில் நடுவில் நிற்பவரை தவிர்த்து இருவரும் குதிக்காமல் நின்று கொண்டு அவரை குதிக்க சொல்வார்கள். அப்படி குதிக்கும் போது அவரது இரண்டு கால்களையும் தங்களது கால்களால் வாரி விட்டு விழ செய்து விடுவார்கள்.
அப்படி விழும் போது பின் மண்டையில் அடி பட்டு உயிருக்கு ஆபத்து நேரிட வாய்ப்பு அதிகம். ஆகவே இந்த சேலஞ்ச்சை யாரும் மற்றவர்களை வைத்து செய்து பார்க்காதீர்கள். ஏற்கனவே பலரும் இப்படி செய்ததில் பலத்த அடி பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது இதே போன்று Salt Challenge என ஓன்று வைரலாக பரவி வருகிறது. இந்த சவால் என்னவென்றால் பங்கேற்பவர்கள் ஒரு உப்பு டப்பாவை எடுத்துக்கொண்டு அப்படியே வாயில் கவிழ்த்து கொள்கின்றனர். டப்பாவில் இருக்கும் உப்பு முழுவதும் அவர்களது தொண்டைக்குள் இறங்கிய பின் கரிப்பு தங்க முடியாமல் உப்பை வாயிலிருந்து துப்பிவிடுகின்றனர்.
இந்த சவாலில் வெற்றி பெறுவதற்கு முழுமையாக என்ன செய்து முடிக்க வேண்டும் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் பலரும் இதை செய்து பார்க்கின்றனர். ஆம், இந்த உப்பு சவாலை ஏற்று கொண்டு செய்து பார்க்கும் பலரது வீடியோக்கள் டிக் டாக் மற்றும் பிற சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இந்த உப்பு சவால் ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் பக்கவாதம் மற்றும் இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதிகப்படியான உப்பு நுகர்வு விஷமாக மாறக்கூடும். இது வலிப்பு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Seriously? #Skullbreaker…? When is this supposed to be funny? Losing faith in humanity slowly but surely 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️ https://t.co/BoW2GT1fzt
— CCZ (@CCZ2301) February 27, 2020
https://twitter.com/GetParentology/status/1234585666471641088