புதுவித தேங்காய் சட்னி
தேவையான பொருட்கள் :
துருவிய தேங்காய் – 2 கப்
காய்ந்த மிளகாய் – 8
புளி – சிறிதளவு
பொட்டுக்கடலை- சிறிதளவு
உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையானஅளவு
எண்ணெய் – தேவையானஅளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு , கறிவேப்பிலை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து ஆற வைத்து கொள்ள வேண்டும் . பின் இதனுடன் தேவையானஅளவு உப்பு , பொட்டுக்கடலை மற்றும் புளி சேர்த்து அரைத்து எடுத்தால் சூப்பரான தேங்காய் சட்னி தயார் !!!