Categories
மாநில செய்திகள்

வெள்ளிக்கிழமை ரமலான் திருநாள்… அரசு தலைமை காஜி அறிவிப்பு..!!

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரமலான் பண்டிகை. இஸ்லாமியர்கள் அனைவரும் 30 நாட்கள் ரமலான் நோன்பு இருப்பார்கள். மாதம் முழுவதும் கடுமையான விரதம் மற்றும் தொழுகைகள் பிரார்த்தனைகளை செய்வார்கள். பின்னர் 30 நாட்களுக்கு பின்பு ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள். இஸ்லாமியர்களுக்கு ஐந்து கடமைகள் உண்டு. ஐந்து கடமைகளையும் ரமலான் மாதத்தில் மிக முக்கியமாக கடைபிடிப்பார்கள். அதாவது சூரிய உதயத்திற்கு முன் உணவு உண்டு, இடையில் அன்னம், தண்ணீர் இல்லாமல் சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருந்து பின்னர் உணவு அருந்துவார்கள்.

இந்த பண்டிகையை இஸ்லாமியர்கள் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கடைப்பிடிக்கத் தொடங்கினர். 30 நாட்கள் கடுமையான விரதங்களை கடைபிடித்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என தமிழக தலைமை காஜி தெரிவித்துள்ளார். இன்று பிறை காணப்படாததால் வெள்ளிக்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். பண்டிகையை கொரோனா தடுப்பு விதிமுறைகளின்படி கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |