மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பிரேம்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாய் வாங்குவதற்காக கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடமதுரைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதில் பிரேம்குமார் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிச்சந்திரனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.