நண்பன் படம் மில்லி மீட்டரில் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் நடந்த நிகழ்ச்சியான ஜோடி நம்பர்1 ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக இருந்தது. இதில் பங்கேற்ற பலரும் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர்களாக மாறினர். அந்தவகையில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் ரின்சன்.
இவரை மில்லிமீட்டர் என்றாலே பலருக்கும் தெரியும். ஏனென்றால் தளபதி விஜயுடன் நண்பன் படத்தில் இவர்தான் நடித்திருப்பார். இந்நிலையில் ரின்சனின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் அவர் தாடி மீசை எல்லாம் வைத்து நன்றாக வளர்ந்து காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் அட நம்ம சின்ன பையன் ரின்சனா இது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.