தற்போது மக்களை ஏமாற்றுவதற்கு பல்வேறு விதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன.அதனைப் பற்றி அறியாத மக்கள் தங்கள் பணத்தை இழந்து விடுகின்றனர். அதன்படி தற்போது வாட்ஸ் அப்பில் புதுவித மோசடி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப்பில் பிரெண்ட் இன் நீட் (friend in need) என்ற பெயரில் மோசடி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது வெளிநாட்டில் எங்கோ சிக்கியிருப்பதாகவும்,தாயகம் திரும்புவதற்கு பணம் வேண்டுமென்றும் பயனர்கள் தங்கள் நண்பர்களிடம் இருந்து வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியை பெற்றுள்ளனர். அதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்பட்டு மோசடி நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் 59 சதவீதம் பேர் இந்த மோசடியை எதிர்கொண்டுள்ளனர். எனவே உங்கள் வாட்ஸ் அப்பில் இது போன்ற தகவல் ஏதாவது குறுஞ்செய்தியாக வந்தால் அதனை யாரும் நம்பி பணத்தை இழந்து விடவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.