மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது நண்பரான வினோத் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து நண்பர்கள் இருவரும் பெட்ரோல் நிரப்பி விட்டு சாலையை கடக்க முயற்சித்தபோது எதிரே வந்த கார் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.
இதனால் நண்பர்கள் இருவரும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த இரண்டு பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு மணிகண்டனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் வினோத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய கார் ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.