Categories
சினிமா தமிழ் சினிமா

பிறந்தநாளன்று நண்பனின் இரங்கல் செய்தி…. இந்தக் கொடுமையான நிகழ்வு யாருக்கும் வரக்கூடாது…. விக்ரம் வேதனை….!!!

பிறந்த நாளன்று நண்பனின் இரங்கல் செய்தியை கேட்கும் கொடுமையான நிகழ்வு விக்ரமிற்கு நடந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இதை அடுத்து விவேக்கின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல திரைப்பிரபலங்கள் விவேக்கின் உடலை நேரில் வந்து பார்த்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சில திரைப் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தின் மூலமாக தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் விக்ரமும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். விக்ரமும் விவேக்கும் தனிப்பட்ட வகையிலும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

விவேக்கின் மறைவு விக்ரமிற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் மிகவும் வேதனைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இன்று விக்ரமின் பிறந்தநாள் ஆகும். ஆகையால் தனது பிறந்த நாளன்று உயிர் நண்பனின் இரங்கல் செய்தியை கேட்கும் கொடுமையான நிகழ்வு வேறு யாருக்கும் வரக்கூடாது என்ற இச்செய்தி பலரது மனதையும் பாதித்துள்ளது.

Categories

Tech |