Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பனின் உயிரைப் பறித்த கொரோனா… துக்கம் தாங்காமல்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு..!!

சென்னை பெருங்குளத்தூர் அடுத்த நெடுகுன்றத்தில் கொரோனாவால் நண்பர் இறந்த துக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் தேவநேசன் நகரை சேர்ந்த சங்கர் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது பள்ளிக்கால நண்பர்கள் கொரோனா நோயால் உயிரிழந்தார். திருச்சியில் நேற்று நடைபெற்ற நண்பரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய அவர் மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நண்பன் இறந்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |