Categories
தேசிய செய்திகள்

நண்பர்களை நம்பிச் சென்ற இரு சகோதரிகள்… ஒரு வீட்டில் அடைத்து வைத்து… 4 பேர் சேர்ந்து செய்த கொடூர சம்பவம்…!!

ராஜஸ்தானில் நண்பர்களை நம்பி சென்ற இரண்டு சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் 19 மற்றும் 20 வயதில் இரண்டு சகோதரிகள் வசித்து வந்தனர். ஒரு நாள் அந்த இரு பெண்கள் வீட்டில் இருந்தபோது அவர்களுக்கு தெரிந்த நண்பர்கள் இருவர் வந்து வெளியில் செல்லலாம் என்று அழைத்துள்ளனர். இதையும் நம்பி அந்த சகோதரிகள் இருவரும் அவர்களுடன் சென்றுள்ளனர்.

பின்னர் இந்த சகோதரிகளை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று, மேலும் இரண்டு நண்பர்களை வரவழைத்து 4 பேரும் சேர்ந்து இரு சகோதரிகளை அடித்து உதைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து வந்த இரண்டு சகோதரிகள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். தகவலின்பேரில் பாலியல் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள 4 இளைஞர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |