Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு… “நட்பால் நல்ல காரியம் நடைபெறும்”… அரசியல் முயற்சியில் வெற்றி…!!

மேஷ ராசி அன்பர்களே…!!  இன்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாளாக இருக்கும்.  கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றி மகிழ்வீர்கள் தொழில் வளர்ச்சி மேலோங்கும்.  வீடு கட்டும் முயற்சி கைகூடும். இன்று பயணம் பலன் தரும் விதத்தில் அமையும்.  இன்று அரசியலில் உள்ளவர்கள் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையை கொடுக்கும்.

உங்களுடைய திறமை இன்று வெளிப்படும். சமூகத்தில் அந்தஸ்தும் அதிகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். இன்றைய நாள்  மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். மாணவகண்மணிகள் கொஞ்சம் முயற்சியின் பேரிலே பாடங்களை படிப்பது ரொம்ப சிறப்பு.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும்.  அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள்.  உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |