Categories
தேசிய செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா… ”நான் எங்கேயும் போகல”….. பிரதமர் மோடி..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிரதமர் மோடி சுற்றுப்பயணமாக செல்லவிருந்த வங்கதேச பயணம் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது..!

வங்காள தேசத்தின் நடைபெறவிருக்கும் முன்னாள் அதிபர் ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் வருகிற  17ம் தேதி டாக்கா செல்வதற்கு திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் வங்கதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.அங்கு 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரதமரின் பாதுகாப்பு கருதி சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படுவதற்கான  வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. இந்த நூற்றாண்டு விழாவை ஒத்தி வைப்பதற்கு வங்கதேச அரசும் முடிவெடுத்துள்ளது என தகவல் வெளியாகின.இதுபோலவே கொரோனோவின் அச்சுறுத்தலின் காரணமாக தனது பிரஸ்ஸெல்ஸ் சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |